மதுரை மாவட்டம், க.வெள்ளாகுளம் பகுதியில் பிறந்து வளர்ந்த க. தாத்தப்பா பாஸ்கர் அவர்கள், தனது கடமை உணர்வால் தமிழக காவல்துறையில் இடம்பெருத்து, விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். கடமைக்கு இணையாக, குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தவர், வயது 32 என்ற இளமையில் 02.02.2025 அன்று திடீரென மாரடைப்பால் காலமானார்.

இவரது திடீர் மறைவு அவரது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அவரது மனைவி, குழந்தை மற்றும் பெற்றோர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான ஆதரவு தேவைப்பட்டதை உணர்ந்த அவரது சக காவல்துறையினர், 2017ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட காவலர்களின் “2017th Batch காக்கும் உறவுகள்” என்ற WhatsApp குழுவின் மூலம் நிதி திரட்ட முயன்றனர்.

மாபெரும் மனிதநேய உதவியாக ரூ. 23,30,500/- திரட்டம்

தமிழக காவல்துறையில் 2017ஆம் ஆண்டு சேர்ந்த 6921 காவலர்கள், தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்து ஒருங்கிணைந்து மொத்தமாக ரூ. 23,30,500/- திரட்டி, அந்த தொகையை அவரது குடும்பத்தினருக்குப் பயன்படுத்தும் வகையில் ஒப்படைத்தனர்.

நிதி வழங்கும் நிகழ்வு

இந்த நிதியுதவியை மரியாதையுடன் வழங்கும் நிகழ்வு 03.04.2025 காலை 11:00 மணியளவில், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. D. கண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில்,

  • ஊழல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. K. ராமசந்திரன்
  • ஆய்வாளர் திரு. R. பூமிநாதன்
  • 2017th Batch காக்கும் உறவுகள் குழுவின் நிர்வாகிகள்
    • விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் – திரு. சதீஸ்பாண்டி, திரு. சரவணன், திரு. சுந்தர்ராஜ்
    • சிவகங்கை மாவட்ட நிர்வாகி – திரு. முகமது அஸ்லம்
    • விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் “காக்கும் உறவுகள்” குழு நண்பர்கள்

இவர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து கொண்டு, காவலர் தாத்தப்பா பாஸ்கர் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிதியை மரியாதையுடன் ஒப்படைத்தனர்.

நிதி ஒதுக்கீடு விபரம்

மொத்தமாக திரட்டப்பட்ட ரூ. 23,30,500/- தொகை, அவரது குடும்பத்தினருக்கு பின்வருமாறு ஒதுக்கப்பட்டது:

மகன் குரு யோகேஷ் (VNR MEDICAL COLLEGE SBI கிளை)

  • வைப்பு தொகை: ரூ. 12,00,000/-

மனைவி திருமதி. விஜயராணி (VNR MEDICAL COLLEGE SBI கிளை)

  • வைப்பு தொகை: ரூ. 4,00,000/-
  • ரொக்கமாக வழங்கப்பட்ட தொகை: ரூ. 1,00,000/-

தாய் மற்றும் தந்தை (இணைப்பு கணக்கு – VNR MEDICAL COLLEGE SBI கிளை)

  • வைப்பு தொகை: ரூ. 6,00,000/-
  • ரொக்கமாக வழங்கப்பட்ட தொகை: ரூ. 30,500/-

மக்களின் மனதை தொட்ட காவல்துறையின் ஒற்றுமை

தமிழக காவல்துறையின் 2017 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட காவலர்கள், தங்கள் சகோதரனாக இருந்த தாத்தப்பா பாஸ்கர் அவர்களின் மறைவு மீது வருத்தமடைந்தும், அவரது குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற உணர்வாலும், ஒருமித்து செயல்பட்டு உதவித் தொகையை திரட்டி வழங்கிய செயல் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டுள்ளது.

இது, காவல்துறையின் ஒற்றுமையை மட்டுமல்லாமல், மனிதநேயத்தையும், நண்பர்களுக்கிடையேயான அன்பையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் மிகச் சிறந்த உதாரணம் ஆகும்.

மறைந்த காவலர் திரு. க. தாத்தப்பா பாஸ்கர் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலுடன்,
2017th Batch காவல் உறவுகள்