தூத்துக்குடியில் உள்ள புகழ் பெற்ற பனிமய மாதா பேராலய 441 ஆண்டு திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்க தேர் பவனி வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுகிறது இதயொட்டி மாதா கோவில் பகுதியில் பாதுகாப்பு பணிகள் குறித்து நெல்லை சரக டி ஐ ஜி பிரவேஷ் குமார் IPS மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் பனிமய மாதா ஆலய வளாகத்தில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் செய்தியாளரிடம் கூறுகையில் பனிமய மாதா திருவிழாவை முன்னிட்டு 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் மேலும் 50 சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு பாணியும் நாலு உயர் கோபுரங்கள் மூலம் கண்காணிப்பு பணி நடைபெறும் என்று தெரிவித்தவர் கொடியேற்றம் உள்ளிட்ட கூட்டம் கூடும் திருவிழாக்களில் பொதுமக்களிடமிருந்து செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண் பெண் காவல்துறையினர் சாதாரண உடையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.