விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர போக்குவரத்து காவல்துறையில் பணியில் உள்ளவர்களுக்கு மன அழுத்தம் போக்கும் பயிற்சி தருவது அவசியமாக உள்ளது, காரணம்ஒருசிலர் பணிகளை விறும்பி செய்கின்றனர் ஒருசிலர் வேண்டா வெறுப்பாகவும் மன அழுத்தம் காரணமாக பொதுமக்களிடம் காரசாரமாக நடந்து கொள்வதோடு, நாள் ஒன்றுக்கு இத்தனை வழக்கு பதிவு செய்து அபதாரம் விதிக்க இலக்கு உள்ளது என்றும் எங்களது கஸ்ட்டம் புரியாத உயரதிகாரிகள் கடுமையான உத்தரவுகள் பிறப்பிப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகி, விதி மீறல்கள் செய்யும் வாகன ஓட்டிகளிடம் இப்படி நடந்து கொள்வதாக பொதுமக்களிடம் கூறி காவல் துறையின் பணிகளை கொச்சை படுத்துவது வேதனைக்குரியது. போக்குவரத்து காவல்துறைக்கு ஒரு நிர்வாக திறன் கொண்ட ஆய்வாளர் தேவையாக உள்ளது காரணம் ஆய்வாளரே இந்த பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியும் . துணை கண்காணிப்பாளர் இதில் கவனம் செலுத்த வேண்டும் அனைவருக்கும் வேலைப்பளு உள்ளது சரக்கு வாகனங்கள் வாடகை வாகனங்கள் ஓட்டுனர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை காரணம் இலக்கு என்பதால் அவர்கள் தான் அதிகம் குறிவைக்கப் படுகின்றனர் உள்ளூர் வாகனங்களுக்கு வாரம் ஒரு கேஸ் என்று கருணையும் காட்டப்படுகிறது என்பது ஒரு ஆறுதல் நடவடிக்கை எடுப்பாரா? மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அவர்கள்…