வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் M.S.முத்துசாமி. இ.கா.ப., அவர்கள் இன்று (18.08.2023)-ம் தேதி இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தனி விரல் கைரேகை ஆய்வு கூடம், காவல் புகைப்படப் பிரிவு மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு (5 & HR) ஆகிய பிரிவுகளில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். மேற்கண்ட பிரிவுகளில் அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். வழக்கு கோப்புகளை பார்வையிட்டு துரித நடவடிக்கை எடுக்கவும் பதினான வழக்குகளில் விரைந்து புலன் விசாரணை முடித்து குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யவும், வழக்கை நீதிமன்றத்தில் உரிய நேரத்தில் நடத்தி குற்றவாளிக்கு விரைந்து தண்டனை பெற்று தருமாறும் அறிவுறத்தினார். மேலும் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் பொதுமக்களிடையே நற்பெயர் பெறும் வகையில் நல்ல முறையில் பணிசெய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் மீதான வன்முறை தொடர்பான வழக்குகளில் முறையாக புலன் விசாரணை செய்து குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் ,பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை தயவு காட்டாமல் கைது செய்ய வேண்டும் என்றும், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து உரிய இழப்பீடு பெற்றுத்தர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். மேலும் ஆளிநர்களின் குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் கேட்டறிந்தார். இவ்வாய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V. கிரண் ஸ்பூதி. இ.கா.ப. அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) வே.விசுவேசுவரப்பா மற்றும் துணைக்காவல் கண்காணிப்பாளர் (SJ&HR) ராஜாசுந்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Posts
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை மீட்பு பணிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் IPS.,
December 18, 2023
கபில் குமார் சி சரத்கர் IPS,mSiren Smart ஆம்புலன்ஸ் போக்குவரத்து திட்டத்தை துவக்கி வைத்தார்
June 28, 2023