Site Icon

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 07.10.2023 வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.M.S.முத்துசாமி இ.கா.ப., அவர்களின் தலைமையில்  மாவட்ட காவல் கண்காகணிப்பாளர் N.மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் முன்னிலையில் பணியிடை பயிற்சி மையத்தின் வாயிலாக வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் குற்ற விசாரணையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நுணுக்கங்கள் (Nuances of Crime Investigation) பற்றிய பயிற்சி வகுப்பினை V.சித்தண்ணன், B.Sc., M.L., CC & IS (Rtd.SP) அவர்கள் மற்றும் பாரம்பரிய குற்ற விசாரணை மற்றும் சைபர் குற்ற விசாரணை (Traditional Crime Investigation Versus Cyber Crime Investigation) பற்றிய பயிற்சி வகுப்பினை பாலு சுவாமிநாதன், B.A., CC & IS (Rtd.Adsp) ஆகியோர்களால் எடுக்கப்பட்டது. இதில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது குறித்தும், இளஞ்சிறார் குற்றங்கள் குறித்தும், புலன்விசாரணை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் பற்றியும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், காவல்துறையினர் எந்தெந்த நேரங்களில் தற்காப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியும், குற்ற சம்பவங்களில் எவ்வாறு ஆதாரங்களை திரட்டுவது, வழக்கமான குற்றங்களுக்கும் இணையவழி குற்றங்களுக்கும் உண்டான வேறுபாடுகள், வழக்கமான குற்றங்களில் சாட்சியங்களை கண்டறிவது, இணையவழி குற்றங்களில் ஆதாரங்களை சேகரிப்பது, இணையவழி குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வது குறித்தும், மேலும் குற்ற விசாரணை முறை சட்டம், இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் குறித்தும் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் பற்றி விரிவாக பயிற்சியளிக்கப்பட்டது.