வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் கடந்த 03.07.2023-ம் தேதி வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முவைவர் . M.S.முத்துசாமி இ.கா.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்காணிப்பாளர் N.மணிவண்ணன் இ.கா.ப., ஆகியோர்கள் இணைந்து தொலைந்துபோன மற்றும் களவுபோன செல்போன்களை விரைந்து கண்டுபிடிக்க Cell Tracker என்ற Google Form-ஐ வேலூர் மாவட்ட பொது மக்களுக்காக அறிமுகப்படுத்தினார்கள். Cell Tracker-ல் 9486214166 என்ற WhatsApp எண்ணிற்கு “Hi” என்ற Message அனுப்பி தொலைந்துபோன மற்றும் களவுபோன செல்போன் தொடர்பாக புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 03.07.2023-ம் தேதி முதல் வேலூர் மாவட்டத்தில் 821 புகார்கள் பதிவுசெய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக 162 செல்போன்கள் 21.07.2023-ம் தேதி உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மீண்டும் துரித நடவடிக்கையின் மூலம் 10.10.2023-ம் தேதி இரண்டாம் கட்டமாக சுமார் 40,47.000 (நாற்பது லட்சத்து நாற்பத்தி ஏழாயிரம்) ரூபாய் மதிப்புடைய 210 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 372 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தங்களது செல்போன்களை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் வேலூர் மாவட்ட காவல்துறைக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர்.
Related Posts
கோவையில் 54 கிலோ கஞ்சா பறிமுதல்… தனிப்படையினரை நேரில் சென்று வாழ்த்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
December 7, 2023
மங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா லட்சுமி தலைமையிலான போலீசார் 10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை கடத்திய மூவரை கைது செய்தனர்
August 7, 2024