நம் இந்திய திருநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7-ந் தேதி நாடு முழுவதும் கொடிநாளாக அனுசரிக்கப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளில் அரசு, முன்னாள் படைவீரர்களுக்கு அவர்கள் ஆற்றிய தொண்டுகளை நினைவு கூர்ந்து நன்றி பாராட்டி வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் படைவீரர் கொடிநாள் உண்டியல் வசூலை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ கா ப அவர்கள் தொடங்கி வைத்தார்கள். கொடிநாளில் திரட்டப்படும் நிதியானது போர்க்களத்தில் உயிர்நீத்த படைவீரர்களின் குடும்பத்தாருக்கும், ஊனமுற்ற படைவீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரது விதவைகளின் மறுவாழ்விற்காகவும், நலத்திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது. இவ்வாறு நாகை மாவட்ட ஊர்க்காவல் படை வீரர்களைக் கொண்டு திரட்டப்படும் நிதியானது நாகை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
Related Posts
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
March 30, 2024
திண்டுக்கல் மாவட்டத்தில் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு “போலிஸ் அக்கா” திட்டம்.
November 8, 2024