திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன் காணாமல் போனதாக அந்தந்த காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள் மீது மனு ரசீது பதிவு செய்து அதன் விவரங்கள் திருப்பத்தூர் மாவட்ட சைபர் செல் பிரிவிற்கு மேல்நடவடிக்கைக்காக அனுப்பியிருந்ததின் பேரில் மனுக்கள் சம்பந்தமாக துரிதமாக விசாரணை மேற்கொண்டு மாவட்டம் முழுவதும் 149 செல்போன்களை கண்டுபிடித்துள்ளனர். அதன் மொத்த மதிப்பு ரூபாய் 35 லட்சத்து 09 ஆயிரத்தி 500 ஆகும் (Total Value Rs.35,09,500/-)
23.12.2023 அன்று திருப்பத்துார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான்,இ.கா.ப., அவர்கள் திருப்பத்தூர் அருகில் உள்ள நந்தினி மஹாலில் நடைபெற்ற விழாவில் 149 செல்போன்களையும் அதன் உரிமையாளர்களிடம் நேரடியாக வழங்கினார்.
மேலும் பொதுமக்கள் தங்களின் செல்போன் தொலைந்து போனால் உடனடியாக அவசர எண் 100-ல் புகார் செய்யலாம் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யலாம் அல்லது அதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளமான CEIR-Central Equipment Identity Register- https://www.ceir.gov.in/Home/index.jsp απή அளித்தால் தொலைந்து போன செல்போனை உடனடியாக கண்டுபிடித்து விடலாம்.
சட்டவிரோதமாக திருட்டு செல்போன்களை விற்பனை செய்வதும், அதை வாங்கி உபயோகிப்பதும் சட்டப்படி குற்றம் ஆகும்.
இது போன்ற செயல்களில் யாரேனும் ஈடுபடுவது சம்மந்தமாக எந்த ஒரு தகவல் கிடைக்கப்பெற்றாலும் உடனடியாக அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். மேலும் 24*7 காவல் கண்காணிப்பாளர் அலுவலக காவல் உதவி எண் / வாட்ஸ் ஆப் எண் 9442992526-ற்கு புகார்கள் தெரிவிக்கலாம். புகார்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.