சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சென்னை எல்லைக்குட்பட்ட சாலைகளில் பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதிசெய்யவும், U திருப்பங்கள், ஒரு வழிப்பாதை, புதிய வேக வரம்புகள், பள்ளி பாதுகாப்பு மண்டலங்கள் போன்ற பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு முயற்சிகள் காரணமாக, GCTP தனது பகுதிகளில் விபத்துகளில் அளவை குறைத்து வருகிறது.

போக்குவரத்து வழக்குகள் பதிவு செய்வதின் மூலமாகவும் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு முன்முயற்சிகள் மூலமாகவும் மரண விபத்துக்கள் அதிகரிக்காமல் இருப்பதை GCTP உறுதி செய்கிறது. 2023-ல் வாகன விபத்துகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இந்தியாவிலேயே இத்தகைய குறைவான விபத்தினை தக்கவைத்துள்ள ஒரே பெருநகரம் சென்னை மட்டுமே. மேலும் சாலை விபத்துகளால் அதிகமாக இறப்பவர்களின் விகிதத்தில் 1வது இடத்திலிருந்து 4வது இடத்திற்குக் கீழே இறங்கியுள்ளது.

பொதுமக்களுக்கு போக்குவரத்தை பற்றி மேலும் அறிவூட்டும் வகையில், GCTP உடன் ஒருங்கிணைந்து திரைப்பட இயக்குனரான Tr.விக்னேஷ் சிவன் அவர்கள் இயக்கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் “NEENGA ROAD RAJA VA” 14.02.2024 அன்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையால் வெளியிடப்பட்டது. போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வாகன ஓட்டிகள் தவறான வழிகளிலிருந்து வாகனத்தை இயக்குவது குறித்த விழிப்புணர்வும் (Wrong side driving). ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதையும் தடுக்கும் வகையில் இந்த வீடியோ உள்ளது. இதேபோல், போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதற்கான நுண்ணறிவுகளை வழங்கும் மற்றொரு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் திரு.யோகி பாபு, திரு.சாந்தனு பாக்யராஜ், திரு.பகவதி பெருமாள், திருமதி.அர்ச்சனா, திரு.அப்துல் லீ மற்றும் அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் GCTP தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

2021 ஆம் ஆண்டில் சென்னை பெருநகரில் விபத்தின் இறப்பு எண்ணிக்கை 573 ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 204 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதால் 279 பேர் உயிரிழந்துள்ளனர். இது 50% ஆகும். கடந்த ஆண்டு 2023ல், இது 196 ஆக குறைக்கப்பட்டு 38% ஆக குறைந்துள்ளது.

தவறான பாதையில் வாகனம் ஓட்டுவது (Wrong side drive) தொடர்பாக சிறப்பு நடவடிக்கையாக 2023ஆம் ஆண்டில் விதிமீறல் செய்பவர்கள் மீது மொத்தம் 60.181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை, சாலைப் பாதுகாப்பு நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு சென்னை பெருநகரம் முழுவதும் 100 பள்ளிகளில் நடத்தப்பட்டுள்ளன. இதில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுமார் 7200 மாணவர்களை சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் Tr.D.மகேஷ் குமார் இ.கா.ப, காவல் இணை ஆணையாளர். போக்குவரத்து தெற்கு, திரு.V.பாஸ்கரன், காவல்துறை துணை ஆணையாளர், போக்குவரத்து, கிழக்கு மாவட்டம், திரு.P.குமார் காவல் துணை ஆணையாளர், போக்குவரத்து வடக்கு மாவட்டம் ஆகியோர் கலந்து கொண்டனர்.