பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் காவல்துறை சார்பாக 80 பழங்குடி சிறுமியர்களுக்கு 20 நாட்கள் தற்காப்பு கலை பயிற்சி முகாம் கடந்த 22.01.2024-ம் தேதி துவங்கி 01.03.2024-ம் தேதி நிறைவு பெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சண்முகம் அவர்களின் உத்தரவின்படியும் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சார்லஸ் சாம் ராஜதுரை அவர்களின் அறிவுரைப்படி “பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம் “ஆற்பாக்கம் மற்றும் களியாம்பூண்டி” அரசினர் மேல்நிலை பள்ளியில் பயிலும் பழங்குடி இனத்தை சேர்ந்த 80 பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சியான கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி தகுதிவாய்ந்த சிறப்பு ஆசிரியர்கள் மூலமாக 22.01.2024-ம் தேதி முதல் 01.03.2024ம் தேதி வரை 20 நாட்கள் அளிக்கப்பட்டது அதன் நிறைவு நிகழ்ச்சியாக
01.03.2024-ம் தேதி கராத்தே மற்றும் சிலம்பம் பயின்ற மாணவிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சண்முகம் அவர்கள்
மாணவிகளுக்கு பாராட்டு சான்றும் சிறப்பான பயின்ற மாணவிகளுக்கு வெற்றி கோப்பை மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.சார்லஸ் சாம் ராஜதுரை, திரு.பாலகுமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி.சக்தி காவ்யா, மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் திருமதி.சியாளா, மாவட்ட குழந்தைகள் உதவி மைய உறுப்பினர் திருமதி.செல்வி, அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.விஜயலட்சுமி, மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி காவல் ஆய்வாளர்கள் திருமதி.பிரபாவதி, சோமசுந்தரம், சுப்பிரமணி மற்றும் அரசினர் மேல்நிலை பள்ளி தலைமையாசியர்கள் திரு.கோபி மற்றும் திரு.வேதகிரி ஆகியோர்கள் கலந்துக்கொண்டனர்.
இத்திட்டத்தை வெகு சிறப்பாக செயல்படுத்திய அதிகாரிகளையும், பயிற்சி மாணவிகளையும், ஆசிரியர்களையும் மற்றும் மாணவிகளின் பெற்ற பெற்றோர்களையும், காஞ்சிபுரம் சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்