தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் telegram செயலியில் வரும் பகுதி நேர வேலை வாய்ப்பு (online part time job) என்ற விளம்பரத்தை நம்பி ரூபாய் 1,09,000/-பணத்தை செலுத்தி உள்ளார், பிறகு தான் ஏமாற்றம் அடைந்ததை தொடர்ந்து, பணத்தை மீட்டு தர வேண்டி தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை தொடர்ந்து சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர முயற்சியால் இழந்த பணத்தை மீட்டு தேனி மாவட்ட கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.விவேகானந்தன்(பொறுப்பு-சைபர் கிராம் காவல் நிலையம்) அவர்கள், காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிச்சைபாண்டி அவர்கள் பாதிக்கப்பட்ட நபரை நேரில் அழைத்து பணத்தை ஒப்படைத்தார்,

மேலும் பொதுமக்கள் இதுபோன்று பகுதி நேர வேலை வாய்ப்பு என்று உங்களுக்கு வரும் குறுஞ்செய்தி,செயலிகள் மூலம் வரும் லிங்குகளை நம்பி பணம் கட்டி ஏமாற வேண்டாம் என தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவல்துறையினர் அறிவுறுத்தப்படுகின்றனர்.