திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல் நிலைய சரகம், தாராபுரம் பேருந்து நிலையத்தில் நேற்று 14.04.24 ஆம் தேதி இரவு 21.00 மணிக்கு பேருந்துக்காக காத்திருந்த நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் பழனி(36) என்பவர் மயங்கி கீழே விழுந்து கிடந்தவரை அங்கு ரோந்து பணியில் இருந்த தாராபுரம் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு.கோபால் மற்றும் திரு.நந்தகோபால் ஆகியோர் மயங்கி விழுந்தவரை CPR முதலுதவி சிகிச்சை செய்து அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அவரின் உயிரை காப்பாற்றினார்கள். மேற்படி சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு.கோபால் மற்றும் திரு.நந்தகோபால் ஆகியோரின் மனிதநேயமிக்க செயலை பாராட்டும் வகையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திருமதி.பாவனீஸ்வரி,இ.கா.ப., அவர்கள் இன்று (16.04.2024) மேற்படி இருவரையும் மேற்கு மண்டல காவல் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
Related Posts
தொண்டாமுத்தூர் காவல் நிலைய தனிப்படையினர் சோதனையில் ஜந்து லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதைபொருள்கள் கைப்பற்றி குற்றவாளிகளை கைது செய்தனர்
September 29, 2023