மங்களமேடு காவல் ஆய்வாளர் பாலாஜி அவர்களின் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமைக் காவலர்கள் அலெக்சாண்டர் முனீஸ்ராஜா மற்றும் முதல்நிலைக் காவலர் கார்த்திக் ஆகியோர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை செய்தும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததிலும் மேற்படி குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்கள் 1.ஆகாஷ் (19) த/பெ ராமச்சந்திரன், மெயின் ரோடு, வளையமா தேவி, புவனகிரி வட்டம், கடலூர் மாவட்டம். 2.மணிகண்டன் (21) த/பெ வீரதுரை,வடக்கு தெரு, அத்தியூர், குன்னம் வட்டம், பெரம்பலூர் மாவட்டம். என்பது தெரியவந்தது.
மேற்படி எதிரிகள் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தியதில் மேலும் ஒரு திடுக்கிடும் தகவலாக மங்களமேடு எறையூர் பகுதியில் ATM-இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் இவர்கள் தான் என்பதும் தெரியவந்தது. இதனடிப்படையில் எதிரிகள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து கீழப்புலியூர், 36 எறையூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் திருடிய 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் ATM கொள்ளை முயற்சிக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் என மொத்தம் 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து எதிரிகள் இருவரையும் மங்களமேடு காவல் ஆய்வாளர் பாலாஜி (27.05.2024) நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றிய தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.