கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மத்திய பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சின்னகாமனன் தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலில் பாண்டிச்சேரியில் இருந்து போலி மது பாட்டில்களை கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ஜெயலட்சுமி மற்றும் மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினர் இணைந்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கை செய்தபோது சந்தேகத்திற்கு இடமாக வந்த PY01CX8613 என்ற பதிவெண்கொண்ட இன்னோவா காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதிலிருந்த 1).சக்திவேல் (42) S/O அருணாச்சலம் வெண்ணி சாமி நகர், அருமார்த்தபுரம், வில்லியனூர், பாண்டிச்சேரி என்பவரிடம் விசாரனை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியவர் காவல்துறையினரின் தொடர் விசாரனையில் பின்னால் வரும் TN16 H 8548 என்ற பதிவெண் கொண்ட டாட்டா தோஸ்த் வாகனத்தில் போலி மது பாட்டில் கடத்திவருவதை ஒப்புக் கொண்டுள்ளார்.

மேற்படி போலி மதுபாட்டில்கள் கடத்திவரும் வாகனத்தை மடக்கி பிடித்து அதிலிருந்த ஓட்டுநர் 2).ரங்கா (29) S/O குமார் தட்டம்பாளையம், பண்ருட்டி, கடலூர் மாவட்டம் என்பவரை கைது செய்து அந்த வாகனத்தில் 1) 180 ML கொண்ட EXPRESS BRANDY 50 BLACK BEARL BRANDY – 50 Boxes, 2) 180 ML – BOXES மொத்தம் 4800 போலி மதுபான பாட்டில்கள் (100 BOXES) கைப்பற்றியதுடன் இக்குற்ற செயலில் ஈடுபட்ட 3).அண்ணாதுரை (46) S/O காசிநாதன், மாரியம்மன் கோவில் தெரு, ஆண்டியார்பாளையம், பாண்டிச்சேரி. 4).சதீஷ் (31) S/O வீராசாமி ஆண்டியார்பாளையம், பாண்டிச்சேரி. 5).கிருஷ்ணமூர்த்தி (45) S/O தர்மலிங்கம் குரங்கு புதூர், குமாரபாளையம் T.K நாமக்கல் மாவட்டம் ஆகியோர் கைது செய்யபட்டனர்.

மேற்படி நபர்களிடம் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ஜெயலட்சுமி மற்றும் மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்து கிடைத்த தகவலின் அடிப்படையில் போலி மதுபான ஆலையானது உல்லிவாய்க்கால், அகரம், வில்லியனூர் பாண்டிச்சேரி என்ற இடத்தில் இயங்கியது தெரியவரவே அங்கு சென்ற காவல்துறையினர் தொடர் விசாரணையில் பாண்டிச்சேரி கரிக்கலாம்பாக்கத்தில் சாராயகடை வைத்திருக்கும் 6).குமார் (எ) சொட்டை குமார் (65) த/பெ கண்ணையன் என்பவரிடம் RECTIFIED SPIRIT (RS)-யை வாங்கி அதை மேற்படி குற்றவாளிகள் தமிழ்நாடு டாஸ்மாக்கில் விற்பனை செய்யும் ஸ்டிக்கரினை போன்று போலியாக ஒட்டி தயார் செய்துள்ளது தெரியவரவே மேற்படி நபரை கைது செய்து அந்த இடத்தில் இருந்து போலி மதுபானம் தயாரிக்க பயன்படும் RS கேன், HOLOGRAM STICKER, மதுபாட்டில் மூடி, கண்ணாடி பாட்டில்கள் மற்றும் 1 TATA Ace, 1 ஈச்சர் வாகனம் கைப்பற்றபட்டது.

இவ்வழக்கில் மொத்தம் 6 நபர்கள் கைது செய்துப்பட்டு போலி மதுபானம் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் மற்றும் கடத்தியதற்கு பயன்படுத்திய வழக்குச் சொத்துக்களான 2 தோஸ்த் வாகனம், 1 ஈச்சர், 2 கார் மற்றும் 4800 போலி மதுபான பாட்டில்கள் மற்றும் 3,70,000/- ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டு விசாரணைக்கு பின் நீதிமன்ற அனுப்பிவைக்கபட்டனர். காவலுக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், போலி மற்றும் வெளிமாநில மதுபானம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சமய் சிங் மீனா இ.கா.ப அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.