இராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களின் ஆரோக்கியம் மற்றும் உடல் திறனை மேம்படுத்தும் விதமாக (08.06.2024) ஆம் தேதி மாவட்டம் முழுவதும் அனைத்து உட்கோட்ட தலைமையிடங்களிலும் ‘காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கான முதல் ஓட்டம்” என்ற தலைப்பில் சுமார் 3KM தூரம் வரை நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சியினை நடத்துவதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் உத்தரவிடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மேற்படி நிகழ்ச்சியில் சுமார் 1200 காவல்துறையினர் கலந்து கொண்டனர். இதில் குறிப்பாக 50 முதல் 55 வயது வரை உள்ள காவல் துறையினர் ஆர்வமுடனும், முதல் முறையாக சிலபேர் 3KM தூரத்தினை நடந்தும், ஓடியும் வெற்றிகரமாக அடைந்தனர். இதன் தொடர்ச்சியாக இராமநாதபுரம் உட்கோட்டத்தில் வள்ளல் சீதக்காதி விளையாட்டு மைதானம் அருகே நடைபெற்ற மேற்படி நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ், IPS., அவர்கள் கலந்து கொண்டு 3KM தூரத்தினை காவல் துறையினருடன் இணைந்து ஓடி, அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தினார்கள். மேலும் வாரத்தில் மூன்று முறை 2KM (Run/Walk Challenge) தூரத்தினை நடந்தும், ஓடியும் நிறைவு செய்யும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு மாவட்ட காவல்துறையின் சார்பில் வெகுமதிகள் வழங்கப்படும் என்றும், அவர்கள் முறையாக 2KM தூரம் கடந்தது தொடர்பாக அலைபேசி மற்றும் ஸ்மார்ட் வாட்ச் மூலமாக கண்காணிக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ், IPS., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.