1993 ஆம் ஆண்டு காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக சுமார்10,000 க்கும் மேல் மொத்தமாக தேர்வு செய்யப்பட்டவர்களை ஒரே சமயத்தில் காவலர் பயிற்சிக்கு அனுப்பாமல் மூன்று பிரிவுகளாக பிரித்து 1993, 1994, 1995 என மூன்று ஆண்டுகளாக காவலர் பயிற்சி கொடுத்தார்கள், அதே போல் தற்போது சென்னை பெருநகர காவல் துறையில் மட்டும் 25 வருடம் நல்ல முறையில் பணியாற்றிய சுமார் 720 சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு உதவி ஆய்வாளர் பதவி வழங்கி அவர்களுக்கு உதவி ஆய்வாளர் பயிற்சி வழங்க மூன்று பயிற்சி பள்ளிகள் ஒதுக்கி ஆணை பிறப்பித்தார்கள். ஆனால் சென்னை மாநகர ஆணையாளர் அவர்கள் டி.ஜி.பி., அவர்களுக்கு காவல் துறையினர் பற்றாக்குறையாக இருக்கிறார்கள் அதனால் அவர்களை மூன்று பிரிவுகளாக பிரித்து உதவி ஆய்வாளர் பயிற்சி அளிக்க வேண்டும் என்று கடிதம் எழுதினார், அதை தொடர்ந்து டி.ஜி.பி., அவர்கள் மூன்று பிரிவுகளாக பிரித்து திருவள்ளூர் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்து கொள்ள ஆணை பிறப்பித்தார்கள்.
இதில் முதல் பிரிவு பயிற்சி முடித்துவிட்டாகள் இரண்டாவது பிரிவு பயிற்சி நடைபெற்று கொண்டு இருக்கும் போது பயிற்சி முடிய பத்து நாட்கள் உள்ள நிலையில் கொரோனா அதிகமாகிவிட்டது என்று பயிற்சி நிறுத்தி விட்டு அனைவரையும் அனுப்பி விட்டார்கள் .ஆனால் ஊனம்மாஞ்சேரி பயிற்சி பள்ளியில் மட்டும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நேரடி உதவி ஆய்வாளர்களுக்கு மட்டும் தொடர்ந்து பயிற்சி கொடுத்து வருகிறார்கள் .அவர்களுக்கு கொரோனா தொற்று பரவாதா அதேபோல் தற்போது புதிதாக10,000 க்கு மேல் தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கு இம்மாதம் 15 ஆம் தேதி 43 பயிற்சி பள்ளியில் காவலர் பயிற்சி கொடுக்க ஆணை பிறப்பித்துள்ளார்கள். இவர்களுக்கு கொரோனா தொற்று பரவாதா ஆனால் எங்களுக்கு மட்டும் கொரோனா தொற்று முடிந்த உடன் தான் பயிற்சிக்கு அனுப்புவோம் என்று ஆணை பிறப்பித்து உள்ளார்கள் எங்களுக்கு மட்டும் ஏன் இந்த பிரிவினை பார்க்கிறார்கள் என்று புலம்புகிறார்கள். இதனால் சென்னை காவல் துறை மத்தியில் காவல் அதிகாரிகள் மீது மிகுந்த அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.
சிறப்பு நிருபர்.