சென்னை பெருநகர காவல்துறையில் மொத்தம் 111 காவல் சிறார் & சிறுமியர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. சிறார் மற்றும் சிறுமியர்களின் நலன்களை வளர்ப்பதற்கு பாதுகாப்பான சூழலை வழங்கி அவர்களை பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றுவது காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களின் முக்கிய நோக்கமாகும். மேலும், சென்னை பெருநகர காவல்துறையின் கீழ் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் குறைந்தது ஒரு காவல் சிறார் & சிறுமியர் மன்றம் செயல்படவும், மேலும் காவல் சிறார் & சிறுமியர் மன்றங்களில் உள்ள சிறார் மற்றும் சிறுமியர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெருநிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், காவல் சிறார் & சிறுமியர் மன்றங்களின் செயல்பாட்டை மேம்படுத்த, சென்னை பெருநகர காவல்துறைக்கு நிதி உதவிகள் செய்து வருகின்றன. குறிப்பாக HCL, Saint Gobain, Bhoomika Trust, Bala Mandir Kamaraj Trust நிறுவனங்கள், காவல் சிறார் & சிறுமியர் மன்ற சிறுவர் மற்றும் சிறுமியர்களின் கல்வித்திறன், பொருளாதார பிரச்சனைகள் மற்றும் முன்னேற்றத்திற்கான ஆலோசனைகள் ஆகியவற்றிற்காக நிதி உதவி வழங்கி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 28 சிறார் மன்றங்கள் பராமரித்து வரப்படுகின்றன. இதனை தொடர்ந்து, Adithya Birla நிறுவனம், Don Bosco Anbu Illam என்ற தன்னார்வு தொண்டு நிறுவனம் மூலமாக V-6 கொளத்தூர், K-5 பெரவள்ளூர் மற்றும் K-7 ICF ஆகிய 3 காவல் சிறார் & சிறுமியர் மன்றங்களில் உறுப்பினர்களாக உள்ள மாணவர்களின் திறனை மேம்படுத்த அடுத்த ஓர் ஆண்டிற்கு நிதி உதவி செய்ய முன்வந்துள்ளது.
அதன்பேரில், விவேக் வல்சன், Joint President, Adithya Birla Groups, கடந்த 26,06.2024 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்களிடம் மேற்படி 3 காவல் சிறார் & சிறுமியர் மன்றங்களுக்கு ரூபாய் 6 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும் 3 காவல் சிறார் & சிறுமியர் மன்றங்களின் செயல்பாட்டினை மேம்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனமான தொன் போஸ்கோ அன்பு இல்லத்தின் Executive Director, Fr,Andrews Stephen Raj, அவர்களுடன் சென்னை பெருநகர காவல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.