காவலர் வாய்ஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு
வாகன பேரணி மற்றும் கருத்தரங்கம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இன்று நடந்தது.
முதலில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
பின்பு குமாரசாமி ராஜா திருமண மண்டபத்தில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்ட ஓவியப்போட்டி நடைபெற்றது ,300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் .
மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முனைவர் மணிவண்ணன் ,டிஎஸ்பி பிரீத்தி ஊர்காவல் படை மண்டல தளபதி ராம்குமார்ராஜா இன்ஸ்பெக்டர்கள் ராஜா , லட்சுமணன் லாவண்யா ஆகியோர் ஓவியங்களை பார்வையிட்டனர் .
பின்னர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது மாணவ மாணவியர் பொதுமக்கள் காவல்துறையினர் 700 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 20 பேருக்கு பரிசுகள் மற்றும் கலந்து கொண்ட மாணவ மாணவியருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வாளர்கள் லாவண்யா மற்றும் மூத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் லட்சுமணன் ஆகியோர் பேசினர்.
மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தும் விதமாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முனைவர் மணிவண்ணன் அவர்கள் பேசினார்
முடிவில் வந்திருந்த அனைத்து
காவல்துறையினர் மற்றும் சமூக பெரியவர்களும் இந்நிகழ்ச்சியை நடத்திய காவலர் வாய்ஸ் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவித்துக்கொண்டனர்.
ராதாகிருஷ்ணன் , விருதுநகர் .