விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கணபதி சுந்தரநாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவையா வயது 47. இவர் ஊருக்கு அருகில் உள்ள புல்லுப்பத்தி மலை அருகே
பன்றி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். அத்துடன் ஒரு 6 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஒரு தென்னந் தோப்பையும் குத்தகைக்கு எடுத்து பராமரிப்பு செய்து வருகிறார். இந்த தோப்பில் சிலர் மாடுகளை மேய்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பூவையா கடுமையாக எச்சரிக்கை செய்து கண்டித்து வந்தாராம். இது குறித்து கணபதி சுந்தர் நாச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கும் இவருக்கும் பகை இருந்து வந்தது. இதற்கிடையே கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பூவையாவின் மனைவி செல்வி தனது கணவர் பூவையாவை காணவில்லை என சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.இது குறித்து சேத்தூர் ஊரக போலீசார் பூவையாவின் படத்தை போட்டு அப்பகுதியில் விசாரணை செய்து வந்தனர். இதற்கிடையே இன்று காலை ராஜபாளையம் மேற்குதொடர்ச்சி மலை பகுதிக்கு செல்லும் அய்யனார் கோவில் பாதையில் முடங்கியாறு பாலம் பகுதியில் ஒரு அழுகிய நிலையில் மனித தலை கிடப்பதாக ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ராஜபாளையம் டி எஸ் பி. அழகேசன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு தலையை கைப்பற்றினார்கள். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பூவையாவுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த மூவருக்கும் சண்டை ஏற்பட்டதாக தெரியவந்தது. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன்களான ஈஸ்வரன் (19 )தளபதி (21) மற்றும் இவர்களின் சித்தப்பா.பாலகிருஷ்ணன் ஆகிய மூவரையும் பிடித்து விசாரணை செய்ததில் தங்களது மாடு பூவையா நிலத்தில் மேய்ந்தது என்று கூறி தங்களை தாக்கியதற்காக ஆத்திரத்தில் கொலை செய்து உடலை புல்லு புத்தி மலை அடிவாரத்தில் ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியில் புதைத்து விட்டதாக தகவல் தெரிவித்தனர் அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று மிகுந்த சிரமத்தின் பேரில் வலது கால் துண்டிக்கப்பட்ட நிலையில் உடலை புதைத்து வைத்திருந்தனர். வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் பிரேதம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது துண்டிக்கப்பட்ட தலையும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது மேலும் கொலை நடந்த இடம் சேத்தூர் ஊரக காவல் நிலைய எல்லை என்பதால் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து விசாரணை செய்துவருகிறார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. கண்ணன் நேரில் பார்வையிட்டு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.இந்த சம்பவம் காரணமாக அந்த கிராமத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது ஆகவே அந்த பகுதி முழுவதும் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொலை குற்றவாளி மூவர்