நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இன்று 21.10.2024_ந் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாளில் காவலர்களின் உயிர்த் தியாகத்தை போற்றும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, இ.கா.ப., அவர்கள் தலைமையில், கருப்பு பட்டை அணிந்து, அரசு மரியாதையுடன் 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மணிகண்டன், துணை காவல் கண்காணிப்பாளர்கள் தேவராஜ், ஜெயபாலன், பிரதீப், பார்த்திபன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சக்தி, காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.