சமூக வலைதளங்களில் இருந்து பெண்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என திருப்பூர் அரசு பெண்கள் கல்லூரியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார். திருப்பூர் மாநகர காவல் துறையின் சார்பில் ஜீரோ கிரைம் என்ற திட்டத்தின் அடிப்படையில் பொதுமக்களுக்கு குற்ற செயல்களை தடுப்பது மற்றும் அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது அதன்படி இன்று திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது அதில் பெண்கள் எவ்வாறு தங்களை சமூக வலைதளங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம், சமூக வலைதளங்களில் உள்ள தவறான நபர்களிடமிருந்து விலகி இருப்பது குறித்து திருப்பூர் மாநகர காவல் துறையினர் விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.