கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் I.P.S., அவர்களின் உத்தரவின் பேரில், நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் I.P.S., அவர்களின் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில், சார்பு ஆய்வாளர்கள் சுமித் ஆல்ட்ரின், பாலசெல்வன் மற்றும் காவலர்கள் நாகர்கோவில் நகரப் பகுதியில் வாகன சோதனைச் செயலில் ஈடுபட்டனர்.
சோதனையின் போது, பதிவு எண் தகடு பொருத்தாமல் அதிவேகமாக இயக்கப்பட்ட 8 இருசக்கர வாகனங்கள் கண்டறியப்பட்டு, அதற்கான அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், பாதுகாப்பு விதிகளை மீறி, தலைக்கவசம் அணியாமை, அபாயகரமான முறையில் வாகனம் இயக்குதல், மூன்று நபர்கள் பயணம் செய்தல், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் இயக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் மொத்தமாக ₹95,500 அபராதம் விதிக்கப்பட்டது.
இவ்வாறு செயல்பட்ட காவல்துறையினர், போக்குவரத்து சட்டங்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றனர்.