ஆவடி காவல் ஆணையரகத்தின் சார்பில், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள காவல் உதவி செயலி குறித்த விழிப்புணர்வு முகாம் இன்று (12.02.2025) காலை, பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் நடைபெற்றது.
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆவடி காவல் ஆணையாளர் திரு. கி. சங்கர், இ.கா.ப., அவர்கள் கலந்து கொண்டு, பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு காவல் உதவி செயலியின் பயன்பாடு மற்றும் செயல்முறை விளக்கங்களை வழங்கினார். மேலும், துண்டு பிரச்சுரங்கள் வழங்கி, செயலியை பதிவிறக்கம் செய்யும் முறையை விளக்கியதோடு, அதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.


இதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்ட மாணவிகள் மற்றும் பொதுமக்கள் காவல் உதவி செயலியை தங்களது கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தத் தொடங்கினர்.
இதேபோன்று,
🔹 ஆவடி பேருந்து நிலையத்தில் கூடுதல் காவல் ஆணையாளர் திருமதி. கே. பவானீஸ்வரி, இ.கா.ப.
🔹 போக்குவரத்து பிரிவு காவல் துணை ஆணையாளர் திரு. அன்பு
🔹 திருவேற்காடு பேருந்து நிலையத்தில் காவல் துணை ஆணையாளர் திரு. மகேஸ்வரன், இ.கா.ப.
🔹 செங்குன்றம் பேருந்து நிலையத்தில் செங்குன்றம் காவல் துணை ஆணையாளர் திரு. பாலகிருஷ்ணன்


ஆகிய உயர் அதிகாரிகள் விழிப்புணர்வு முகாம்களில் கலந்துகொண்டு, பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு காவல் உதவி செயலியின் செயல்முறை விளக்கங்களை வழங்கி, அவசர காலங்களில் அதை பயன்படுத்தும் விதம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த முயற்சியின் மூலம், பெண்களின் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.