திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஷ்ரேயா குப்தா இ.கா.ப. அவர்களின் மேற்பார்வையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் குழுவுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த மூன்று மாதங்களில் திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன் தொலைந்ததாகப் பெறப்பட்ட புகார்களை மையமாக கொண்டு, அதற்கான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் மாவட்டம் முழுவதும் 169 செல்போன்கள் மீட்கப்பட்டன, அவற்றின் மொத்த மதிப்பு ரூ.30,05,813/- ஆகும்.

(02.04.2025) காலை 10 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலக Conference Hall-ல் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், மீட்கப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்களிடம் நேரடியாக வழங்கப்பட்டன. இவ்விழாவில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா IPS.,அவர்கள் செல்போன்களை வழங்கினர்.

சைபர் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு

இதற்கிடையே, பொதுமக்கள் சைபர் குற்றங்களுக்கு இரையாகாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தற்போதைய Loan APP மோசடி, KYC Update ஏமாற்றம், Online Investment மோசடி, Part-time Job Scam போன்றவற்றில் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியமென தெரிவிக்கப்பட்டது.

சைபர் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும், ஏதேனும் குற்றச்செயல் நடந்துவிட்டால் 1930 என்ற உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம். இணையவழி புகார்களை www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் அளிக்கலாம். மேலும், சைபர் குற்றங்கள் நம்முடைய துணையால் தான் நடக்கின்றன என்பதற்கான விளக்கமும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் போது கூறப்பட்டது.

சட்டவிரோதமாக திருட்டுச் செல்போன்களை விற்பனை செய்வதும், அதை வாங்கி பயன்படுத்துவதும் குற்றமாகும். இதுபோன்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் உடனடியாக அந்த காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். மேலும், 24×7 காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் 9442992526 (WhatsApp மற்றும் காவல் உதவி எண்) மூலமாக புகார் அளிக்கலாம். புகாரின் அடிப்படையில் உடனடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.