மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், காவல்துறையின் கோரிக்கையை ஏற்று, காவலர் முதல் ஆய்வாளர் வரை தங்கள் அடையாள அட்டையை காண்பித்து, தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்தார். இதற்காக அனைத்து காவலர்களுக்கும் “நவீன அடையாள அட்டை” வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.



அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக, இன்று (24.01.2025) இராமநாதபுரம் மாவட்ட காவலர்களுக்கு இலவச பயண அட்டைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . G. சந்தீஷ், IPS., அவர்கள் காவலர்களுக்கு “நவீன அடையாள அட்டைகளை” வழங்கி திட்டத்தை செயல்படுத்தினார்.
இந்த நடவடிக்கை காவல்துறையினரின் வேலைச்சுமையை குறைத்து, அவர்கள் பணியாற்றும் பாதுகாப்பை மேம்படுத்த உதவிடும் என்பதில் பலராலும் பாராட்டப்பட்டது.