கோவை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. K. கார்த்திகேயன், இ.கா.ப. அவர்கள், மாவட்டம் முழுவதும் குற்றங்களை தடுக்கும் நோக்கில் காவல்துறையினருக்கு சிறப்பு அறிவுறுத்தல்கள் வழங்கி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இன்று (08.03.2025), மாவட்டத்தில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க, காவல்துறையின் தனிப்படைகள் தீவிர சோதனைகளை மேற்கொண்டன. இந்தச் சோதனையின் போது, செட்டிபாளையம் காவல் நிலைய எல்லையில், சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, செட்டிபாளையம் காவல் நிலைய போலீசார் மலுமிச்சம்பட்டி அருகே சோதனை நடத்தினர்.
அப்போது, மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணி மகன் பிச்சைபாண்டி (25) என்பவர் சட்டவிரோதமாக 590 போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்த போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலதிக விசாரணைகளுக்குப் பிறகு, குற்றவாளியை நீதிமன்ற காவலில் ஒப்படைத்தனர்.
காவல் கண்காணிப்பாளர் Dr. K. கார்த்திகேயன் அவர்கள், போதைப் பொருட்கள் விற்பனை அல்லது சட்ட ஒழுங்குக்கு எதிராக செயல்படும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்கள், இதுபோன்ற குற்றங்கள் குறித்த தகவல்களை தயங்காமல் காவல்துறைக்கு தெரிவிக்கலாம்.
தொடர்பு எண்கள்:
📞 கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை: 94981-81212
📱 வாட்ஸ்அப் எண்: 77081-00100
தகவல் வழங்குவோர் பற்றிய ரகசியம் முழுமையாக பாதுகாக்கப்படும்.