உங்கள் ஊரில் உங்களைத் தேடி முதல்வர் திட்டம்…..!தேனி DSP பார்த்தீபன் உங்கள் ஊரில் உங்களைத் தேடி முதல்வர் என்ற திட்டத்தின் படி தேனி DSP பார்த்தீபன் சுமார் 10 -க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனசோதனையில் ஈடுபட்டு வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகளை பின்பற்றும் வகையில் விபத்தில்லா தேனியாக மாற்றும் முயற்சியில் ஒவ்வொரு ஆய்வாளரும் சார்பு ஆய்வாளர்களும் தங்களுக்கான பணியினை சிறப்பாக செய்து தினசரி 50க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிகளை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்ய வேண்டும், மதுபோதையில் வாகனங்கள் ஓட்டும் நபர்கள் மீது எந்தவித மான பாராபட்சம் காட்டாம்மல் வழக்குகள் பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் தலைமையில் தினசரி வாகன தணிக்கையில் ஈடுபட்டு தேனி உட் கோட்டத்தை விபத்தில்லா உட் கோட்டமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் சிறப்பாக செயல்பட்டனர்.

அதன் ஒரு பகுதியாக நேற்று 21.08.2024 மாலை 4 மணி முதல் 6 வரையில் 2 மணி நேரம் வாகன சோதனையில் தேனி PS – 228 , அல்லிநகரம் PS – 127, PC பட்டி PS – 108, வீரபாண்டி PS – 46 போக்குவரத்து PC- 137 மொத்தம் – 646 வழக்குகள் DD – 10 என சிறப்பாக செயல்பட்டனர். இவ்வாகனச் சோதனையின் போது தேனி ஆய்வாளர் உதயகுமார், PC பட்டி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன்,போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஜுகுமார்,சார்பு ஆய்வாளர்கள் இத்ரிஸ்கான்,அசோக்,சரவணன், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் திரளாக ஈடுபட்டனர். சிறப்பாக செயல்பட்ட தேனி உட்கோட்ட காவல் துறையினரின் பணியினை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் IPS வெகுவாக பாராட்டினர்.