பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட “அவள்” (AVAL – Avoid Violence through Awareness and Learning) σ கீழ்பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்ட உரிமைகள், சட்ட உதவிகள், பாதுகாப்பு அம்சங்கள், சமுதாயத்தில் பெண்களின் பங்கு, தனித்திறன், சட்ட நுணுக்கங்கள் தொடர்பான தகவல்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும், ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் விளம்பரங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூகத்தில் வன்முறையைக் குறைக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டும் வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், சென்னை பெருநகர காவல்துறையில் நிர்பயா நிதியுதவியுடன் இயங்கும் பாதுகாப்பு நகரத்திட்டங்களில் ஒன்றான திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இன்று (21.05.2024) சென்னை, ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில், “பணியிடத்தில் பெண்களின் அடிப்படையான பாதுகாப்பு (Ground Reality of Workplace Safety)” என்ற தலைப்பில் பயிலரங்கு’ நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப்பிரிவு துணை ஆணையாளர் முனைவர்.கோ.வனிதா அவர்கள், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்தும், பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் இருந்து எவ்விதம் பாதுகாத்து கொள்வது குறித்தும் காவல் உதவி செயலி, பல்வேறு காவல் உதவி எண்கள் ஆகியவை குறித்தும் உரையாற்றினார்.

மேலும் திருமதி.ஆதிலஷ்மி லோகநாதன், வழக்கறிஞர் அவர்கள் அவர்கள் பங்கேற்று பணியிடத்தில் பாதுகாப்பின் அடிப்படை உண்மை குறித்து சிறப்புரையாற்றினார்.