நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட தெற்குப்பொய்கை நல்லூரில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், மற்றும் அவரது மகளும் தனியாக வசித்து வந்துள்ளனர். கணவர் இரண்டு வருடங்களுக்கு முன் இறந்த நிலையில் கடந்த 19.07.2024 அன்று நள்ளிரவு சுமார் 01 மணியளவில் சிறுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது யாரோ ஒரு மர்ம நபர் ஒருவர் சிறுமியின் அருகில் வருவதைக் கண்டு உடனே சத்தம்போட்டுள்ளார். உடனே அந்த மர்ம நபர் அவரை தள்ளிவிட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதனால் சிறுமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனே சுதாரித்துக்கொண்ட அந்த சிறுமி கொள்ளைபுரம் வழியாக வெளியில் ஓடிச்சென்று தனது உறவினர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார். சத்தம்கேட்டு வெளியில் வந்து பார்த்த உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை பற்றி கூறி தன் தாயை காணவில்லை என்றும் கூறியுள்ளார். உடனே உறவினர்கள் தேடி பார்த்தபோது வீட்டின் கொள்ளைபுரத்தில் உடம்பில் கண், காது ,மார்பு ,நெற்றி, பல் உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்களுடன் அந்த பெண் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் தாய் மற்றும் மகள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவகல்லூரி அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இது குறித்து நாகை மாவட்ட வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.தகவல் அறிந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா. ப குற்றம் நடந்த சம்பவ இடத்தில் நேரடியாக விசாரணையில் இறங்கினார்.குற்ற சம்பவ இடத்தில் கிடைக்கப்பட்ட செருப்பு, சிகரெட் துண்டு, மது பாட்டில்கள், ஆகிய பொருட்களைக் கொண்டு தடைய அறிவியல் துறை உதவியுடன் மற்றும் CCTV காட்சிகள் அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் விசாரணையை தொடங்க ஆரம்பித்தனர், பின்பு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் 21 காவல்துறையினர் கொண்ட 3 தனிப்படைகள் அமைத்து அந்த மர்மநபரை கண்டறிய தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது, CCTV காட்சிகளின் அடிப்படை மூலம் நாகை மாவட்டம் தெற்குப் பொய்கை நல்லூரில் தொடங்கப்பட்ட தேர்தல் வேட்டையானது குற்றவாளியின் ஒவ்வொரு நகர்வையும் காவல்துறையினர் பின் தொடர ஆரம்பித்தனர், நாகை புதிய பேருந்து நிலையத்தில் CCTV காட்சிகளை ஆராய்ந்ததில் குற்றவாளி பாண்டிச்சேரி பேருந்தில் செல்வதாக தகவல் கிடைத்த நிலையில் காவல்துறையினர் பின் தொடர்ந்து சென்றனர் பின்பு கடலூர் அருகே காவல்துறையினர் பேருந்தை சுற்றி வளைத்து உள்ளே சென்று பார்த்ததில் குற்றவாளியானவர் பேருந்தில் இல்லை, காவல்துறையினர் தம்மை பின் தொடர்ந்து வருவதை அறிந்த குற்றவாளி பேருந்தில் இருந்து பாதியில் இறங்கி வேறு ஒரு பேருந்தில் சென்றுள்ளார் என்பது தெரிய வந்தது, இதனை அடுத்து மீண்டும் விசாரணை துரிதப்படுத்திய காவல்துறையினர் அவ்வளியே சென்ற அனைத்து பேருந்து பேருந்துகளிலும் விசாரிக்கத் தொடங்கினர், இந்நிலையில் குற்றவாளியான முத்துக்குமார் காவல்துறையினரை திசை திருப்ப மீண்டும் வேளாங்கண்ணி நோக்கி பேருந்தில் சென்றார் இதனை அறிந்த தனிப்படை காவல்துறையினர் அவரைப் பின் தொடர்ந்து வந்த நிலையில் 20.07.2024 இரவு கருவேலங்கடை அருகே சுற்றித்திரிந்த காரைக்கால் மேடு பகுதியை சேர்ந்த முத்துக்குமாரை நாகை மாவட்ட காவல்துறையினர் பிடிக்க முயன்றனர். அப்போது தப்பி ஓடிய முத்துக்குமார் வழுக்கி விழுந்ததில் வலது காலில் எலும்பு முறிவு, மற்றும் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்ட காவல் துறையினர் ஒரத்தூர் மருத்துவ கல்லூரியில் அனுமதித்தினர். மேலும் அவர் சிகிச்சைக்குப் பின்பு 21.07 2024 அன்று திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும் இவ் வழக்கில் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் மகளுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித்தொகை பெற்றுத் தர வழிவகை செய்யப்பட்டுள்ளது என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்,மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி என முத்துக்குமாருக்கு குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.மேலும் இவ்வாறு வழக்கில் திறம்பட செயல்பட்ட 21 தனிப்படை காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பண வெகுமதிகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.