மதுரை மாவட்ட எல்லையில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் குடியிருப்புகள், கடைகள், சாலை சந்திப்புகள் ஆகிய பகுதிகளில் பொருத்தபட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் கண்டறியப்பட்டதோடு அவர்களிடமிருந்து களவாடப்பட்ட சொத்துக்கள் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு வாகன விபத்து வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிவதற்கும் விபத்து ஏற்படுத்திய வாகனங்களை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்கள் பலன் அடைவதற்காகவும் பல்வேறு விதங்களில் உதவியாக இருந்த காரணத்தால் மேற்படி நபர்களின் சமூக பொறுப்பையும், அக்கறையையும் கௌரவிக்கும் விதமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 50 நபர்களை நேரில் அழைத்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்கள் மற்றும் இதர நிறுவனங்கள் தாமாக முன்வந்து தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சமூகநோக்கில் CCTV கேமராக்களை நிறுவ முன்வருமாறு மதுரை மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.