மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. ஸ்டாலின், இ.கா.ப. அவர்களின் உத்தரவின்பேரில், பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, இன்று 06.02.2025, மயிலாடுதுறை மண்ணம்பந்தல் A.V.C. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட காவல் துறையின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. ஸ்டாலின், இ.கா.ப. அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்:

  1. பெண் கல்வியின் முக்கியத்துவம்
  2. POCSO சட்டம் – குற்றங்கள் மற்றும் தண்டனைகள்
  3. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – சட்ட நடவடிக்கைகள்
  4. பாலியல் தொடர்பான செயல்களில் ஈடுபடாமல் உறுதியாக இருத்தல்
  5. மயிலாடுதுறை மாவட்டத்தில் பதிவான குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – அதன் தாக்கங்கள்
  6. பாலியல் ரீதியான இடையூறுகளிலிருந்து தற்காத்துகொள்ளும் வழிகள்
  7. “காவல் உதவி” செயலியின் பயன்கள் மற்றும் பயன்பாடு
  8. சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்தும் விதம்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார். மேலும், காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் வழிமுறைகளை விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. பாலாஜி, செம்பனார்கோவில் காவல் நிலைய ஆய்வாளர் திரு. கருணாகரன், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சுகந்தி, மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் திரு. சிவக்குமார் ஆகியோர் விழிப்புணர்வு உரை ஆற்றினர்.

மேலும், A.V.C. பொறியியல் கல்லூரியின் இயக்குநர் முனைவர் திரு. செந்தில் முருகன், A.V.C. கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் திரு. நாகராஜ், மற்றும் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இதில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரித்து, சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.