24 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்த காவல்துறை அதிகாரிகளை பாராட்டு தெரிவித்த புதுக்கோட்டை எஸ். பி வந்திதா பாண்டே ஐபிஎஸ்.

புதுக்கோட்டை கணேஷ் நகர் 1ஆம் வீதியில் வசிக்கும் பாதிரியார் ஜான் தேவசகாயம் என்பவரது வீட்டில் நேற்று பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை போனதாக நேற்று புகார் அளிக்கப்பட்ட நிலையில்,இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மதுரை மாவட்டம் உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சந்திரகுமார்(34) என்ற குற்றவாளியை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 15 லட்சம் மதிப்புள்ள 36 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு தங்க நெக்லஸையும் பறிமுதல் செய்துள்ளனர். 24 மணி நேரத்தில் குற்றவாளியை கண்டறிந்த போலீசாருக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தங்களை பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.