பெண்கள் காவல்துறையில் பங்கேற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், 11வது தேசிய பெண்கள் காவல்துறை மாநாடு தமிழ்நாடு காவல்துறை மற்றும் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (BPR&D) இணைந்து சென்னை தமிழ்நாடு காவல் உயர்ப்பயிற்சியகத்தில் நடத்தி வருகிறது.
மாநாட்டின் பிரமாண்ட தொடக்க விழா காவல் உயர் பயிற்சியக கலையரங்கில் நடைபெற்றது. மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு நித்தியானந்த் ராய் விழாவைத் தொடங்கி வைத்து, பெண்கள் காவல்துறையின் வளர்ச்சியை பாராட்டினார். அவர் பேசும் போது, பெண்கள் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை முன்னிலைப்படுத்தும் வகையில், மூன்று புதிய குற்றவியல் சட்டங்களில் (புதிய இந்திய நீதிச் சட்டங்கள்) மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை விளக்கினார்.
திருமதி பால நாகதேவி, ஐபிஎஸ், வரவேற்புரையையும், BPR&D இயக்குநர் திரு ராஜீவ் குமார் ஷர்மா, ஐபிஎஸ் BPR&D மூலம் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களைப் பற்றியும், பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளையும் எடுத்துரைத்தனர்.
திரு சங்கர் ஜிவால், DGP, தமிழ்நாடு, சிறப்பு விருந்தினரை நினைவுப் பரிசளித்து கௌரவித்தார். திரு சந்தீப் ராய் ரத்தோர், ஐபிஎஸ், உள்துறை அமைச்சகம் மற்றும் BPR&D-க்கு நன்றியுரையுடன் விழாவை முடித்தார்.
விழாவைத் தொடர்ந்து, பெண்கள் காவல்துறையின் வளர்ச்சி பாதையை காட்டும் நினைவு கண்காட்சி அமைச்சர் திரு நித்தியானந்த் ராய் தொடங்கி வைத்தார். இதில், பெண்கள் காவல்துறையின் சாதனைகள், மைல்கற்கள், மற்றும் மாபெரும் கவிஞர் பாரதியாரின் கவிதைகள் இடம் பெற்றன. “பெண்கள் அதிகாரமளிப்பு” குறித்த கேள்வி-பதில் அமர்வும் இடம்பெற்றது.
மாநாட்டின் முதல் நாளில், எல் & டி, எச்.சி.எல், மற்றும் பல்துறை நிபுணர்கள் உரையாற்றினர். பெண்கள் காவல்துறையில் அனுபவிக்கும் சவால்கள், பயிற்சி, சீருடை, தொழில்வளம் மற்றும் வாழ்வுத் தரம் ஆகிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
மாநாடு நாளை வரை கருப்பொருள் சார்ந்த அமர்வுகளுடன் நடைபெறுகிறது. மாநாட்டின் நிறைவு விழா, மாண்புமிகு துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.