சென்னை: 1997 பேட்ச் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. C. கோபு அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்திற்கு, 1997 பேட்ச் காவலர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக மொத்தமாக ரூ.15,00,000/- நிதியுதவி வழங்கப்பட்டது.
நிதி உதவியின் விபரம்:
- 1997 பேட்ச் காவலர்கள்: ரூ.14,00,000/- (வாட்ஸ் அப் குழு மூலம் திரட்டப்பட்டது)
- சென்னை பெருநகர காவல்துறை: ரூ.1,00,000/-
- மொத்தம்: ரூ.15,00,000/-
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. ஆ. அருண், இ.கா.ப அவர்கள், இன்று (13.02.2025) காவல் ஆணையாளர் அலுவலகத்தில், மறைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. C. கோபுவின் மனைவி திருமதி உமா மகேஸ்வரி அவர்களுக்கு காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார். மேலும், அவரது மகன்கள் சாய்சந்தீப் (வயது 23), ஸ்ரீராகவ் (வயது 19), சாய்சவரேஷ் (வயது 14) ஆகியோரின் கல்வி மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பு தொடர்பாக தேவையான உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
C. கோபுவின் சேவை மற்றும் மறைவு: திரு. C. கோபு, சென்னை C-4 இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். பணியில் இருந்தபோது உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி கடந்த 11.09.2024 அன்று காலமானார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர்:
- திருமதி A. ராதிகா, இ.கா.ப. – கூடுதல் ஆணையாளர் (மத்திய குற்றப்பிரிவு)
- திரு. K. அதிவீரபாண்டியன் – துணை ஆணையாளர் (நிர்வாகம்)
- திருமதி S. மெகலீனா ஐடன் – துணை ஆணையாளர் (நலன் மற்றும் எஸ்டேட்)
- 1997 பேட்ச் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள்.
இந்த உதவியால், மறைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கோபுவின் குடும்பத்தினர் நெகிழ்ச்சியடைந்தனர். காவல்துறையினர் இணைந்து செய்த சமூகப் பணியால் காவல்துறையின் மனிதநேய பக்கம் வெளிப்பட்டுள்ளது.