தமிழ்நாடு காவல் துறையில் 1999 ஆம் ஆண்டு இரண்டாம் நிலைக்காவலர்களாக பணியில் சேர்ந்த அதிகாரிகள் இன்று மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடமையாற்றி வருகின்றனர்.
அவர்களில் ஒருவர், மதுரை மாவட்டம் சமயநல்லூரைச் சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் I. முருகன், மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றியவர். உடல்நலக் குறைபாடுகள் காரணமாக அவதிப்பட்டு வந்த முருகன் கடந்த 15.04.2025 அன்று மறைந்தார்.


இதைத் தகவலறிந்த 1999 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த அவரது சக காவலர்களில் சுமார் 2709 நபர்கள் ஒன்று கூடி நிதி பங்களிப்பு செய்தனர். அவர்களது ஒற்றுமையின் வெளிப்பாடாக மொத்தம் ₹13,59,000 (பதிமூன்று லட்சத்து ஐம்பத்தொன்பதாயிரம் ரூபாய்) சேகரிக்கப்பட்டது.
இந்த தொகை, மறைந்த முருகனின் மனைவி மற்றும் மகளிடம், இன்று 12.06.2025 அன்று மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் B.K. அர்விந்த், இ.கா.ப. அவர்களால் வழங்கப்பட்டது.
1999 ஆம் ஆண்டு காவலர்களின் இந்த பொது நன்மைக்கான உதவியும், அவர்களின் ஒற்றுமையையும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.