பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மேரலையானூர் கிராமத்தைச் சேர்ந்த தலைமை காவலர் கருணா உடல் நலக் குறைவால் காலமான நிலையில் அவரது குடும்பத்திற்கு 2002 ஆம் ஆண்டு தேர்வான காவலர்கள் தமிழ்நாடு முழுவதும் காவல்துறை உதவும் உறவுகள் சார்பாக குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மேரலையானூர் கிராமத்தைச் சேர்ந்த கருணா என்பவர் கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலூர் கோட்டை காவல் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றார். இதில் 2002 ம் ஆண்டு காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 3500 க்கும் மேற்பட்ட காவலர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனாவின் கோர பிடியில் நாடு முழுவதும் அகப்பட்டு கிடந்த பொழுது ஏராளமான உயிர் சேதம் ஆகிய நிலையில் அப்பொழுது whatsapp facebook instagram போன்ற சமூக வலைதளங்களில் தங்களது நட்பை விரிவுபடுத்திக் கொண்ட காவலர்கள் whatsapp குழுக்கள் மூலமாக ஒன்றிணைந்தனர் அப்பொழுது whatsapp குழுக்கள் மூலமாகவே தங்களுடன் பயிற்சி பெற்ற காவலர்களுக்கு இறப்பு ஏற்பட்டால் தமிழகம் முழுவதும் பணி செய்து வரும் 2002 காவலர்கள் மாதம் 500 ரூபாய் வீதம் தங்களது தமிழ்நாடு காவல்துறை 2002 காவல் உதவும் உறவுகள் மூலம் ஏதேனும் விபத்து மற்றும் உடல்நிலை குறைவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அவர்கள் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பணம் மற்றும் அவர்கள் குடும்பத்திற்கு தேவையான உதவிகள் செய்ய தீர்மானிக்கப்பட்டு அதனை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் காவலர் கருணா கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் பணி செய்து வந்த நிலையில் அவர் கடந்த 13.11.2023 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்த நிலையில் அவரது மகன் விஜய் ஆதித்யா என்பவரது அஞ்சல் வங்கி கணக்கில் 12 லட்சம் ரூபாய் வைப்பு நிதி மற்றும் காவலர் கர்ணாவின் மனைவி லைலா அவர்களின் கையில் 3 லட்சத்து 75 ஆயிரத்து 600 ரூபாய் குடும்ப பராமரிப்பு செலவுக்கு நிதி வழங்கப்பட்டது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டு கருணா அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி இந்திய அஞ்சல் துறையில் செலுத்தப்பட்ட வைப்பு நிதி புத்தகம் காசோலை பணம் ஆகியவை வழங்கினர். மேலும் காவலர்கள் தங்களது குடும்பத்தாரின் எதிர்கால நலனை கொண்டு சமூக வலைதளங்கள் மூலமாக ஒன்றிணைந்து மாதாமாதம் சேமித்து வரும் பணத்தில் இதுவரை 44 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தி அதன் குடும்பத்தாரின் குடும்ப நலநிதியாக கொடுத்து வரும் சம்பவம் சக காவலர்கள் மட்டும் இன்றி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.