கோவை மாநகரம் – உதவும் கரங்கள்: தெய்வத்திரு சுப்பிரமணி குடும்பத்திற்கு உதவித் தொகை வழங்கல்
உதவும் கரங்கள் அமைப்பின் மூலம் 2003ஆம் ஆண்டு காவல் நண்பர்களின் 70வது பங்களிப்பாக ரூ.28,40,000/- (5680 × 5,500/-) தொகை சேகரிக்கப்பட்டது. மறைந்த தெய்வத்திரு. சுப்பிரமணி (உதவும் கரங்கள் வரிசை எண்: 7197) அவர்களின் குடும்பத்திற்கான உதவித்தொகை 20.01.2025 அன்று வழங்கப்பட்டது.
உதவித் தொகை விபரங்கள்:
- மனைவி திருமதி ப்ரியா:
- HDFC வங்கிக் கணக்கு (A/c No. 50100588108234): ரூ.10,00,000/- தொகை செலுத்தப்பட்டது.
- HDFC Insurance பென்ஷன் திட்டம்: ரூ.5,00,000/- செலுத்தப்பட்டது. இதன் மூலம் மாதாந்திரம் ரூ.1,360/- பென்ஷன் மற்றும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.9,07,000/- முதிர்வு தொகையாக கிடைக்கும்.
- மகன் சந்தீப்:
- HDFC Life Insurance பாலிசி: ரூ.5,00,000/- மதிப்பில் பாலிசி பெறப்பட்டது. முதல் ஆண்டு தவணையாக ரூ.1,00,000/- செலுத்தப்பட்டது. அடுத்த 4 ஆண்டுகள் வைப்புத் தொகையிலிருந்து செலுத்தப்படும். 10 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ரூ.10,28,140/- முதிர்வு தொகை கிடைக்கும்.
- மகன் தரனீஷ்:
- HDFC Life Insurance பாலிசி: சந்தீப்புக்கு அளிக்கப்பட்ட பாலிசியைப் போலவே, ரூ.5,00,000/- மதிப்பில் பாலிசி வழங்கப்பட்டது.
- தாயார் திருமதி பத்ரம்மாள்:
- HDFC வங்கிக் கணக்கு (A/c No. 50100750593981): ரூ.4,00,000/- செலுத்தப்பட்டது.
- HDFC Insurance பென்ஷன் திட்டம்: ரூ.5,00,000/- செலுத்தப்பட்டது. மாதாந்திரம் ரூ.1,360/- பென்ஷன் மற்றும் 25 ஆண்டுகளில் ரூ.8,39,000/- முதிர்வு தொகை கிடைக்கும்.
- Star Health Insurance:
- மனைவி ப்ரியா, மகன் சந்தீப், தரனீஷ் ஆகியோருக்கு ரூ.30,031/- செலவில் 2 ஆண்டுகளுக்கான மருத்துவ காப்பீடு செய்யப்பட்டது.
- தற்போதைய தேவைகளுக்காக:
- திருமதி ப்ரியா அவர்களுக்கு ரூ.2,40,000/- காசோலையாக வழங்கப்பட்டது.
இவைகள் அனைத்தும் 20.01.2025 அன்று தெய்வத்திரு சுப்பிரமணி அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. உதவும் கரங்கள் அமைப்பு, சுயமாக வாழ்வை நிலைநிறுத்த உதவும் வகையில், குடும்பத்தாருக்கு விரிவான திட்டங்களுடன் நிதி மற்றும் காப்பீட்டு ஆதரவுகளை வழங்கியுள்ளது.
