ஈரோடு காவல் கட்டுபாட்டு அறை பிரிவில் பணியாற்றிய தலைமைக்காவலர் 2579 திரு.S.ஆறுமுகம் (உதவும் கரங்கள் வரிசை எண் 7373), ஈரோடு அவர்கள் 28.01.2024 அன்று உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்ட காரணத்தால் தமிழ்நாடு காவல் துறையில் 01.12.2003 அன்று பணிக்கு சேர்ந்து தற்போது தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி கொண்டு இருக்கும் காவல் நண்பர்கள் தாங்களாகவே மனம் உவந்து தலா ரூபாய் 500/- வீதம் ஒவ்வொரு மாவட்டம் மற்றும் நகரம் வாரியாக தன்னார்வு காவலர்கள் ழூலமாக பெற்ற ரூபாய் 28,58,500/-(ரூபாய் இருபத்து எட்டு லட்சத்து ஐம்பத்தி எட்டாயிரத்து ஐநூறு ரூபய் மட்டும் ) உதவித்தொகை பெற்ற விபரம் கீழே குறிப்பிட்டவாறு, மறைந்த திரு. ஆறுமுகம் அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளின் வாழ்வாதாரம்,படிப்பு மருத்துவ செலவு மற்றும் அவர்களது எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களது வங்கி கணக்கில் வைப்பு தொகையாகவும் மற்றும் மருத்துவ காப்பீடு செய்யபட்ட விபரம்.
1) திரு. ஆறுமுகம் அவர்களின் மனைவி தவமணி (33) பெயரில் ரூபாய் 8,01,135 (எட்டு லட்சத்தி ஆயிரத்து நுற்றி முப்பத்து ஐந்து மட்டும்) அவரது வங்கியில் வைப்பு தொகையாக செலுத்தப்பட்டது.
2) திரு. ஆறுமுகம் அவர்களின் மகன் கார்த்திகேயன் (17) பெயரில் ரூபாய் 10,00,000 (பத்து லட்சம்) அவரது பெயரில் அஞ்சலக வங்கியில் வைப்பு தொகையாக செலுத்தப்பட்டது. 01.12.2033 ல் 20,00,000 (இருபது லட்சம்) ஆக की Kisan Vikas Patra Number 020115164508
3) திரு. ஆறுமுகம் அவர்களின் மகள் மதுமிதா (12) பெயரில் ரூபாய் 10,00,000 (பத்து லட்சம்) அவரது பெயரில் அஞசலக வங்கியில் வைப்பு தொகையாக செலுத்தப்பட்டது. 01.12.2033 ல் 20,00,000 (இருபது லட்சம்) ஆக Kisan Vikas Patra Number 020115163534
4) திரு. ஆறுமுகம் அவர்களின் மனைவி மற்றும் 1-மகள், 2-மகன்கள் பெயரில் 3 வருடங்களுக்கு ரூபாய் 10,00,000 (பத்து லட்சம்) க்கு Star Health Insurance நிறுவனத்தில் மருத்துவ காப்பிடு ரூபாய் 57365/- செய்யப்பட்டது. மேற்படி ரூபாய் 28,58,500 உண்டான வங்கி கணக்கு புத்தகங்கள், பத்திரங்கள்மற்றும் மருத்துவ காப்பிடு பத்திரங்கள், இவையனைத்தும் இன்று 27.05.2024 ம் தேதி காலை 10.00 மணிக்கு திரு. ஆறுமுகம் அவர்களின் மனைவி மற்றும் மகன், மகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.