கரூர் மாவட்டத்தில் பணியாற்றிய 2003 பேட்ச் காவலர் HC 1608 பிரகாஷ் கடந்த 30.05.2024 அன்று இயற்கை எய்தினார். அவரது மனைவி முத்துலட்சுமி (இல்லத்தரசி) நாமக்கல் மாவட்டம், வேலூர் தாலுகா, பரமத்தி அஞ்சல், முஸ்லிம் தெரு, நம்பர் 84 எனும் முகவரியில் சொந்த வீட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு இரட்டையர்கள் ஆகிய மகன் பவின் (11/24) மற்றும் மகள் பூஜா (11/24) உள்ளனர். இருவரும் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
குடும்பத்தின் தற்போதைய நிலை
காவலர் பிரகாஷின் மறைவிற்குப் பின்னர், அவரது மனைவி முத்துலட்சுமி, தனது அண்ணன் நாகராஜின் (2003 பேட்ச் காவலர்) மேற்பார்வையில் குளித்தலை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார்.
பிரகாஷின் பெற்றோர்:
- தந்தை மோகன் – ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் (ஓய்வு பெற்று 7–8 ஆண்டுகள் ஆகின்றது)
- அம்மா ரெங்கநாயகி – இல்லத்தரசி, பரமத்தி, வேலூர், நாமக்கல் மாவட்டத்தில் தனது சொந்த வீட்டில் வசித்து வருகின்றார்.
பிரகாஷுக்கு ஒரு அக்கா மற்றும் ஒரு தங்கை உள்ளனர். இருவரும் திருமணமாகி கணவருடன் வசித்து வருகின்றனர்.

குடும்பத்திற்காக எடுத்த முயற்சிகள்
- தமிழ்நாடு கிராம வங்கியில் தனி கணக்கு திறப்பு:
- மகன் பவின் (11/24) மற்றும் மகள் பூஜா (11/24) ஆகிய இருவருக்கும் தலா ₹10,00,000/- (பத்து லட்சம்) (Term: 10 years, Maturity Amount: ₹19,82,019/-) டெபாசிட் செய்யப்பட்டது.
- முத்துலட்சுமியின் பெயரில் ₹7,18,000/- டெபாசிட் செய்யப்பட்டது.
- மீதித் தொகை ₹94,436/- குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
- மருத்துவ காப்பீட்டு திட்டம்:
- Star Health Insurance Family Pack – ₹10 லட்சம் கவரேஜ் (1 வருடம்) – பிரீமியம் ₹21,564/- செலுத்தப்பட்டுள்ளது.
உதவி வழங்கும் நிகழ்வு
மேற்கண்ட உதவித்தொகைகள் 30.01.2024, மாலை 4:00 மணிக்கு கரூர் பஜார் ரோட்டில் உள்ள சுமதி ஸ்வீட் முதல் மாடி, சுமதி ரத்தினம் ஹாலில் வைத்து வழங்கப்பட்டது.
இந்த முயற்சியில் பங்கேற்ற அனைத்து நபர்களுக்கும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.