மதுரை மாநகரில் கடந்த 19.09.2024 அன்று மறைந்த அமரர் காசிநாதன் (79 வது பங்களிப்பு) அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கான விபரம் கீழே வழங்கப்பட்டுள்ளது:

  1. மகள் ஜெசிகா (வயது 13):
    ஜெசிகாவின் எதிர்கால கல்வி செலவுகளை கருத்தில் கொண்டு, எல்.ஐ.சி.யில் ரூ.13,58,356/- டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது 8 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது ஜெசிகா 21 வயது ஆனவுடன் முதிர்வு தொகையாக ரூ.20,91,000/- கிடைக்கும்.
  2. மகன் ருத்ரன் (வயது 6):
    ருத்ரனின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும் வகையில், எல்.ஐ.சி.யில் ரூ.9,13,247/- டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது 18 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது ருத்ரன் 24 வயது ஆனவுடன் முதிர்வு தொகையாக ரூ.26,23,000/- கிடைக்கும்.
  3. மனைவி மகாலெட்சுமி:
    குடும்ப செலவுகளுக்காக, திருமதி மகாலெட்சுமி பெயரில் அஞ்சல் அலுவலகத்தில் ரூ.5,00,000/- டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதனால், மாதந்தோறும் ரூ.3083/- வட்டித் தொகையாக கிடைக்கும்.
  4. மீத தொகை:
    மீதமுள்ள ரூ.45,897/- அவரது வங்கி கணக்கில் காசோலையாக செலுத்தப்பட்டது.

மொத்த தொகை:
மொத்த நிவாரண தொகை ரூ.28,17,500/- ஆகும்.

மேற்கண்ட எல்.ஐ.சி. முதலீடு பத்திரங்கள் மற்றும் அஞ்சலக முதலீடு பத்திரங்கள், 22.01.2025 அன்று மாலை 4.30 மணிக்கு அமிர்த மஹாலில் காசிநாதன் அவர்களின் குடும்பத்தினரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது..

மேலும்:
மதுரை மாநகர எல்.ஐ.சி. ஏஜென்ட் அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில், காசிநாதனின் மனைவி, மகள், மகன் ஆகியோருக்கு ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் Family Health Insurance Policy ரூ.12,000/- மதிப்பில் வழங்கப்படும். இதற்கான செலவு 2003 நண்பர்கள் குழுவால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.