2003 காவல் நண்பர்கள் மற்றும் உதவும் கரங்கள் குழுவின் 73வது பங்களிப்பின் கீழ், மறைந்த திரு. K.வெங்கடாசலம் அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ. 28,28,500/- வழங்கப்பட்டது.
- முதன்மை நிதி ஒதுக்கீடு:
திரு. K.வெங்கடாசலம் அவர்களின் மனைவியார் மற்றும் குழந்தைகள் இல்லாத காரணத்தினால், அவரது தாயார் திருமதி K.செல்லம்மாள் அவர்களின் பெயரில் ரூ. 25,00,000/- (ரூபாய் இருபத்தைந்து லட்சம் மட்டும்) கரூர் வைஸ்யா வங்கி சேமிப்பு கணக்கு (A/c No.1227403000004188) மூலமாக மூத்த குடிமக்கள் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்பட்டது.- இந்த நிரந்தர வைப்பு திட்டத்தின் மூலம் மாதாந்திரம் ரூ. 15,608/- வருமானம் கிடைக்கும் வகையில், நிதி 27.12.2024 அன்று செலுத்தப்பட்டது.
- குடும்ப செலவிற்கான ஒதுக்கீடு:
மீதமுள்ள ரூ. 3,28,500/- (ரூபாய் மூன்று லட்சத்து இருபத்தெட்டாயிரத்து ஐநூறு மட்டும்), நண்பரின் தாயார் திருமதி. K.செல்லம்மாள் அவர்களின் விருப்பத்திற்கிணங்க, அவருடைய சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
ஆவண ஒப்படைப்பு நிகழ்வு:
மேற்கண்ட நிதி ஒதுக்கீடு பற்றிய ஆவணங்கள், இன்று நடைபெறும் நிகழ்வில் 2003 காவல் நண்பர்கள் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில், திருமதி. K.செல்லம்மாள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

நன்றி:
உதவும் கரங்கள் குழுவின் இந்த உதவி, மறைந்த திரு. K.வெங்கடாசலம் அவரின் குடும்பத்துக்கு சிரமங்களை சமாளிக்க உறுதுணையாக இருக்கும்.