திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரைச் சேர்ந்த மறைந்த தலைமைக் காவலர் திரு. சுதாகர் அவர்களின் குடும்பத்தாருக்காக 2003 பேட்ச் “காவல் உதவும் கரங்கள்” அமைப்பின் சார்பில் மொத்தமாக ரூ.28,12,500/- நிவாரண நிதி வழங்கும் நிகழ்வு 03.05.2025 காலை 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் முக்கிய அம்சங்கள்:
- மகள் ஸ்ரீ தர்ஷினி (13) – ரூ.10,50,676/- (காப்பீட்டு எண்: 304234767)
- மகள் ஸ்ரீ ஹர்ஷினி (10) – ரூ.9,91,418/- (காப்பீட்டு எண்: 304234768)
- தாயார் திருமதி சரஸ்வதி – Post Office Senior Citizen Scheme – ரூ.5,00,000/- (அக்கவுண்ட் எண்: 328077658)
- LIC Policy மூலம் பெறப்படும் தொகையால் STAR HEALTH INSURANCE மூன்று நபர்களுக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளது (சுமார் ரூ.5,32,000 மதிப்பில்)
- மீதமுள்ள தொகை ரூ.2,70,406/- மற்றும் ரூ.25,42,094/- மதிப்புள்ள காப்பீட்டு/அஞ்சலக முதலீடுகளாக வழங்கப்பட்டுள்ளது.

81வது பங்களிப்பாக அனைத்து மாவட்ட நண்பர்கள் இணைந்து வழங்கிய இந்த நிதி, குடும்பத்தாரின் நலனுக்காக சிறப்பாக பயன்படும் வகையில் திட்டமிடப்பட்டது.
இந்த நிகழ்வில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அட்மின் நண்பர்கள் நேரில் கலந்துகொண்டு, மரியாதை செலுத்தி, குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தனர்.