தமிழ்நாடு காவல்துறையில் 2017 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்த கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி பெருமத்தூர் கிராமத்தை சேர்ந்த A.வீரசேகரன் என்பவர் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 1.5.2023 தேதி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். 2017 ஆம் ஆண்டு காவலர் பேட்ச் காவல் நண்பர்கள் அனைவரும் WhatsApp குழு உருவாக்கி பாதிக்கப்பட்ட வீரசேகரின் பெற்றோருக்கு உதவ வேண்டி தங்கள் WhatsApp குழு மூலம் செய்தி தகவல் தெரிவித்து, அதன் மூலம் ரூபாய் 14,22,800 (பதிநான்கு லட்சத்து இருபத்து இரண்டாயிரத்து எண்ணூறு ரூபாய்) சேர்த்தனர். இறந்து போன காவலர் வீரசேகரன் தந்தை அறிவழகன், தாய் மணிமேகலை ஆகியோர்களிடம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் அவர்கள் மூலம் வழங்கினார்கள்.

பணத்தை பெற்று கொண்ட வீரசேகரின் பெற்றோர் சக காவலர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார்கள். இந்நிகழ்ச்சியில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்விநாயகம், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் அருட்செல்வன், 2017 ஆம் ஆண்டு பேட்ச் காவலர்கள் அமரவர்ணன், கவியரசன், ராஜதுரை, பாலமுருகன், ஹரிஹரன், சந்திரபிரியன், பூபாலன், உதயச்சந்திரன், தினேகா, சரண்யா ஆகியோர் உடன் இருந்தனர்.