புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலர் தெய்வதிருமதி.சி.விமலா அவர்கள் 28.11.2024 அன்று ஏற்பட்ட சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபினும் அதே நாளில் உயிரிழந்தார்.
அவரது குடும்பத்தின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, 2018 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 38 மாவட்டங்களைச் சேர்ந்த 3297 காவலர்கள் இணைந்து, ரூ.16,65,421 நிதியை திரட்டினர். இந்த நிதி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா, இ.கா.ப. முன்னிலையில் வழங்கப்பட்டது.

நிதி ஒதுக்கீட்டு விவரங்கள்:
🔹 அவரது தாயார் திருமதி. விஜயா மற்றும் கணவர் திரு. மணிகண்டன் பெயரில் தபால் நிலையத்தில் கூட்டு கணக்கு (JOINT ACCOUNT – KVP SCHEME) திறக்கப்பட்டு ரூ.13,00,000 வைப்பு தொகையாக செலுத்தப்பட்டது.
🔹 அவரது தந்தை திரு. சின்ன கண்ணு பெயரில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் மூத்த குடிமக்கள் வைப்புத் தொகையாக ரூ.3,00,000 சேர்க்கப்பட்டது மற்றும் அதற்கான பத்திரம் வழங்கப்பட்டது.
🔹 கணவர் திரு. மணிகண்டன் அவர்களுக்கு ரூ.65,421/- காசோலை வழங்கப்பட்டதோடு, நினைவுச்சின்னமாக மரக்கன்றும் வழங்கப்பட்டது.
இச்சாதாரண நிகழ்வு காவல்துறையினரின் ஒற்றுமையையும், மறைந்த பெண் காவலரின் குடும்பத்திற்கான உணர்வுபூர்வமான ஆதரவையும் வெளிப்படுத்துகிறது.

