சென்னை பெருநகர ஆயுதப்படையில் பணிபுரிந்து மறைந்த காவலர் தெய்வத்திரு அனில்கபூர் அவர்களின் குடும்ப நல நிதி உதவியாக 2018 பேட்ச் காவலர்கள் ஒன்றிணைந்து தங்களது பங்கீட்டு தொகையை காவலர் குடும்பத்தினருக்கு வழங்கினார்கள்.2018 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த 2506 காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ரூபாய் 12,22,270/- பங்கீட்டு தொகையை அவரது பெற்றோர் பெயரில் மாதாந்திர வட்டி பெரும்வகையில் ரூபாய் 10,00,000/- ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வைப்பு தொகையாக செலுத்துப்பட்டுள்ளது.மேலும் மறைந்த காவலர் தாய் மற்றும் தந்தையாரிடம் ரொக்கமாக ரூபாய் 2,22,270/- வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இதுவரை 2018 பேட்ச் காவலர்கள் காக்கும்கரங்கள் குழு மூலமாக தங்களை விட்டு மறைந்த காவலர்களுக்கு உதவுவது மூன்றாவது முறையாகும், அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.