ஆவடி பெருநகர ஆயுதப்படையில்  பணிபுரிந்த, தூத்துக்குடி  மாவட்டத்தைச் சார்ந்த தெய்வத்திரு. மா. ராஜமுருகன் (PC-17281) (வயது 29) அவர்கள்  டைபாய்டு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 29.03.2024 அன்று இறந்துவிட்டார். அவர்களது குடும்பத்தினருக்கு உதவும் விதமாக 2018 பேட்ஜ் 38 மாவட்டங்களை சேர்ந்த காவலர்கள் (2589 Members) அனைவரும் ஒன்றிணைந்து 5ம் பங்களிப்பாக ரூபாய்.12,14,430.00 நிதி திரட்டினார்கள். 

பெறப்பட்ட நிதியானது அவரது சகோதரி மற்றும் சகோதரர் பெயரில் ரூபாய். 4,00,000 + 8,00,000  (Fixed Deposit) வைப்பு தொகையாக செலுத்தப்பட்டுள்ளது. சகோதரி மற்றும் சகோதரிடம்  ரொக்கமாக ரூபாய் 14,430.00 மற்றும் மரக்கன்று வழங்கப்பட்டது. இதுவரை 2018 காவலர்கள்  ரூபாய். 59,25,344.00  குடும்ப நல நிதி பெறப்பட்டு அவை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.