தமிழ்நாடு அரசு மீனவர்கள் மற்றும் அனைத்து மீனவ குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மீனவர்களின் வாரிசுகளுக்கு அவர்கள் இந்திய கப்பற்படை, இந்திய கடலோர காவல் படை மற்றும் காவல் துறை ஆகியவற்றில் சேருவதற்கு 3 மாத கால இலவச பயிற்சி வகுப்புகள் கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் நடத்தப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 13.09.2021 அன்று சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன் படி முதலாவது திறன் மேம்பாட்டு பயிற்சியானது தமிழ்நாடு கடலோர பகுதி மீனவர்களின் வாரிசுகள் 120 பேர் தேர்வு செய்யப்பட்டு மூன்று மையங்களில் கடந்த 14.03.2022 முதல் 14.06.2022 வரை பயிற்சியளிக்கப்பட்டது. அப்பயிற்சியில் பயிற்சி பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துபாண்டி என்ற மீனவ வாரிசு 2023 ஆம் ஆண்டில் இந்திய பணியமர்த்தப்பட்டுள்ளார். கடற்படையில் Sailor ஆக வேலையில்.

அதன் தொடர்ச்சியாக 2-வது அணிக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கடந்த 29.03.2023 அன்று முனைவர் செ.சைலேந்திரபாபு,இ.கா.ப., காவல் துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் அவர்களால் சென்னை மெரினா கடற்காவல் நிலையத்தில் துவக்கி வைக்கப்பட்டது. இப்பயிற்சியில் தமிழ்நாடு கடலோர பகுதியை சேர்ந்த மீனவர்களின் வாரிசுகள் 120 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமாரி ஆகிய 3 கடலூர், மையங்களில் பயிற்சியளிக்கப்பட்டது. இப்பயிற்சியானது இன்று (27.06.2023) நிறைவு பெற்றது. இப்பயிற்சி நிறைவு விழாவில் அந்தந்த பயிற்சி மையத்தை சேர்ந்த (கடலூர், இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமாரி) மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்று சிறப்பாக பயிற்சி பெற்ற மீனவ வாரிசுகளுக்கு பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்கள்.