திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கிவரும் சைபர்கிரைம் காவல் நிலையத்தில் காணாமல் போன செல்போன்களுக்கு கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் ரூ. 17 லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் 13.07.2023 இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் அவர்கள் ஒப்படைத்தார்கள்.
பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்கள் மூலமாக தொடங்கப்பட்ட Mobile Missing WhatsApp number யை பயன்படுத்தி பொதுமக்கள் இனிவரும் காலங்களில் காவல் நிலையம் செல்லாமல் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே தங்களுடைய Whatsapp எண்ணிலிருந்து Hi/Cell Phone Missing என்று Type செய்து 9498101814 என்ற எண்ணிற்கு Message செய்து புகார் அளிக்கலாம். Message செய்த உடனே சம்பந்தப்பட்ட நபரின் Whatsapp எண்ணிற்கு புகார் அளிக்கும் Linkயை பெற்று அதை Click செய்யும் போது தங்களின் சுயவிபரங்கள் மற்றும் தவறவிட்ட கைபேசியின் விபரங்கள் ( IMEI, Date of Missing, Phone Number..etc.,) கொடுத்து Submit செய்தபின் அதற்கான புகார் ஒப்புதல் எண் (Acknowledgement Number) கொடுக்கப்படும். அதனை குறித்து கொள்ளவேண்டும். மேலும் புகார்தாரர் IMEI எண்கள் தெரியாவிட்டாலும் தவறவிட்ட கைபேசியில் இருந்த Phone Number- ஐ பதிவுசெய்தால் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு கண்டுபிடித்து தரப்படும். எனவே மேற்கண்ட தொலைபேசி எண்ணை பயன்படுத்தி புகார் அளிக்கும்படி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இக்காலகட்டத்தில் இணையவழி மூலம் பணபரிவர்த்தனை மிகவும் இன்றியமையாததாக உள்ளது. எனவே பொதுமக்கள் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது கவனமுடன் இருக்க வேண்டும் எனவும், செல்போனிற்கு வரும் OTP எண்களை பகிரவோ, message முலமாக வரும் Linkயை click செய்யவோ வேண்டாம் எனவும் இணைய வழி குற்றங்கள் தொடர்பாக 1930 தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
100 செல்போன்களை மீட்டுக் கொடுத்து சிறப்பாக பணிபுரிந்த திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் அவர்கள் தலைமையிலான காவல் ஆய்வாளர் ரமா, உதவி ஆய்வாளர் ராஜரத்தினம் மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.