தமிழ்நாடு காவல்துறை, கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாத்தல் இமைகள் திட்டம் விழிப்புணர்வு துவக்க விழா இன்று 14.7.2023 தேதி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்கள் நாட்டின் கண்கள், நாட்டின் கண்களாக இருக்கின்ற பெண்களை பாதுகாக்க இமைகள் திட்டம் கடலூர் மாவட்டத்தில் முதன்முதலாக புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து கல்லூரி, பள்ளி மாணவிகளிடமும், ஊராட்சி மன்ற தலைவர்கள் மூலம் அனைத்து ஊராட்சி பெண்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பெண்கட்குக் கல்வி வேண்டும் குடித்தனம் பேணுவதற்கே பெண்கட்குக் கல்வி வேண்டும் மக்களைப் பேணுவதற்கே பெண்கட்குக் கல்வி வேண்டும் உலகினைப் பேணுவதற்கே பெண்கட்குக் கல்வி வேண்டும் கல்வியைப் பேணுவதற்கே!” என்ற – பாரதிதாசன் கவிதை வரிகளுக்கு ஏற்ப கல்வி கற்று தற்சார்பு நிலை உயர்ந்தும், பொருளாதாரத்தில் உயர வேண்டும். கல்வி கற்கும் காலத்தில் கல்வியை ஐயமின்றி கற்க வேண்டும் என பள்ளி மாணவிகளிடம் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதையடுத்து புனித அன்னாள் பள்ளி மாணவிகள் பெண் கல்வி, பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நாடகம், விழிப்புணர்வு நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நீதித்துறை நடுவர் ரகோத்தமன், மாவட்ட குழந்தை நல அலுவலர் அரவிந்த், மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி, மாவட்ட குழந்தை நல குழு தலைவர் .லட்சுமி வீரராகவலு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு, காவல் ஆய்வாளர்கள் மகேஸ்வரி, தாரகேஸ்வரி, தீபா மற்றும் காவல்துறையினர். பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.