தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி போலீசார் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு கூட்டம் நடத்தியதன் பயனாக இன்று ஒரே நாளில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொது இடங்களில் இருந்த 341 ஜாதிய அடையாளங்களை கிராம மக்கள் தாமாக முன்வந்து அழிப்பு – இதுவரை மொத்தம் 2072 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது – ஜாதிய அடையாளங்களை அழித்த கிராம மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டு.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் போலீசார் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து இன்று (22.08.2023) தூத்துக்குடி உட்கோட்டத்தில் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தங்கம்மாள்புரம் பகுதியில் 1 மின்கம்பத்திலும்,
தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசவப்பபுரம், தட்டாப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழதட்டப்பாறை, புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ். புதூர் ஆகிய பகுதிகளில் 10 மின் கம்பங்களிலும், பொது சுவர்கள் 4, பேருந்து நிறுத்தம் 3 என 17 இடங்களிலும்,
திருச்செந்தூர் உட்கோட்டத்தில் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயாமொழி, தேரிக்குடியிருப்பு, கரிசன்விளை, எள்ளுவிளை, திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரம்பவிளை, ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜபுரம், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ கீரனூர், தலைவன்வடலி, குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்டப்ட அண்ணா சிலை ஆகிய பகுதிகளில் உள்ள 77, தெருக்குழாய்கள் 2, பொதுசுவர் 3 என 82 இடங்களிலும்,
ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாதன்குளம், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடையனோடி தங்கம்மாள்புரம், குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலப்புதுக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள 37 மின் கம்பங்களிலும்,
மணியாச்சி உட்கோட்டத்தில் மணியாச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகாராஜபுரம், நாரைக்கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதன்வாழ்வு, பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழமங்கலம், வடக்கு கைலாசபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் மின் கம்பங்கள் 42, நீர்தேக்க தொட்டி 4, தெருக்குழாய் 1, பொதுசுவர் 1, பேருந்து நிறுத்தம் 2, நெடுஞ்சாலைத்துறை அடையாள பலகை 2 என 52 இடங்களிலும்,
கோவில்பட்டி உட்கோட்டத்தில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூப்பன்பட்டி, மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திநகர், சீனிவாசநகர், கொப்பம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமநாயக்கன்பட்டி, நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லூரணி, கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழுகுமலை, கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு இலந்தைகுளம், அய்யனார் ஊத்து ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் மின் கம்பங்கள் 78, மேல் நிலை நீர்தேக்க தொட்டி 3, தெருக்குழாய் 1, பொது சுவர் 7, பேருந்து நிறுத்தம் 2, பாலம் 2 என 93 இடங்களிலும்,
விளாத்திகுளம் உட்கோட்டத்தில் எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆர்.சி தெரு பகுதியில் மின்கம்பங்கள் 7, நெடுஞ்சாலைத்துறை அடையாள பலகை 2 என 9 இடங்களிலும்,
சாத்தான்குளம் உட்கோட்டத்தில் மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தர்மபுரி காலனி, நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல வெள்ளமடம், தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் மின் கம்பங்கள் 34, நீர்தேக்க தொட்டி 2, தெருக்குழாய் 1, பொதுசுவர் 9, பாலம் 4 என 50 இடங்கள் உட்பட இன்று ஒரே நாளில் மொத்தம் 341 இடங்களில் ஊர்த்தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து வெள்ளை நிற பெயிண்டால் ஜாதிய அடையாளங்களை அழித்தனர்.
இதுவரை மொத்தம் 2072 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது.
ஜாதிய அடையாளங்களை தாமாக முன்வந்து அழித்த கிராம மக்களை மற்றும் மேற்படி காவல்துறையினர் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.